AD

கணவரின் நண்பரையே இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல சின்னத்திரை நடிகை!!!

தெலுங்கு சின்னதிரை நடிகையான பவானி ரெட்டி தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்து கொண்டே  தமிழிலும் நடித்து வந்தார். நடிகை பவானி ரெட்டி நடித்த "சின்ன தம்பி" சீரியல் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

பிரதீப் சின்னத்திரை நடிகர் ஆவார். இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது, இதனால் மனம் உடைந்த  பிரதீப் தற்கொலை செய்துகொண்டார், அதுவும் திருமணம் ஆகி எட்டு மாதத்துக்குள் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பவானி ரெட்டி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார் அதுவும், என்னைப் புரிந்த கொண்ட  ஒருவர்தான்,  எனக்கும் என் கணவர் பிரதீப்புக்கும் நெருக்கமான நண்பர் அவருடைய பெயர் ஆனந்த் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த உலகம் என்ன செய்தாலும் பேசிகொண்டேதான் இருக்கும் அதற்கு நான் என்ன செய்வது என்றும், இது எனது பெற்றோர்களின்  விருப்பத்தின் பேரில் இந்த திருமணத்தை செய்துகொள்ளப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.