AD

தளபதியுடன் நடிக்க ஆசைப்படும் ரோஜா பட நாயகி!!

நடிகை மதுபாலா தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தரின் "அழகன்" எனற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.  இயக்குனர்கள் மணிரத்னம் ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். "ரோஜா", "ஜெண்டில்மேன்"போன்ற திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது மீண்டும் தமிழில் நடிகர் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘அக்னி Vs தேவ்’ திரைப்படத்தில் மிரட்டலான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு சமூக தளத்திற்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியளித்தார். அதில் பல சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

தற்போதைய நடிகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோரின் படங்களை பார்ப்பேன். அவர்களது நடிப்பு  ரொம்ப பிடிக்கும். ஆனால் யாருடன் இணைந்து நடிக்க விரும்புவீர்கள் என்று கேட்டால், தளபதி விஜய் தான். கடந்த 20 ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருகிறேன்,  அவரது ஸ்டைல் ரொம்ப பிடிக்கும், படத்திற்கு படம் ஸ்மார்ட்டாக இருக்கிறார். அவருடன் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்திலும் நடிக்க விருப்பம் எனவும் நடிகை  மதுபாலா தெரிவித்துள்ளார்.