AD

இதிலும் போட்டிபோடும் நடிகைகள்!!!

தற்போது திரையுலகில் வலம் வரும் பல நட்சத்திரங்கள் இன்ஜினியரிங், மேல்நாட்டு படிப்பு, டிகிரி முடித்தவர்கள் என படிப்பாளிகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக முன்னணி நடிகைகள் பலரும் டிகிரி படிப்பை முடித்தவர்களாகவே உள்ளனர். நடிகை நயன்தாரா பி.ஏ படித்திருக்கிறார். அனுஷ்கா பிசிஏ படித்துள்ளார். காஜல் அகர்வால் பிஎம்எம், சமந்தா பிகாம், ராசி கண்ணா, அமலாபால், அனுபமா பரமேஸ்வரன் மூவரும் பிஏ ஆங்கிலம் படித்திருக்கின்றனர்.

நடிகை திரிஷா பிபிஏ முடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே எம்காம் படித்திருக்கிறார். அதேபோல் நடிகை ஸ்ரேயா பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். டாப்சி பி டெக் முடித்திருக்கும் நிலையில் நடிகை சாய் பல்லவி டாக்டர் படிப்பை முடித்துள்ளார்.

நடிகைகள் ஸ்ருதி ஹாசன், அனு இம்மானுவேல், ரெஜினா ஆகியோர் சைக்கலாஜி படித்திருக்கின்றனர். நடிக்க வந்த பிறகு மெஹரீன் கவுர், லாவண்யா திரிபாதி, இலியானா போன்றவர்கள் பட்டப்படிப்பை முடித்தனர். நடிகை நித்யா மேனன் ஜர்னலிசம் படித்துள்ளார். ஒரு காலத்தில் , வறுமைக்காக நடிக்க வந்தவர்கள் பலர் தற்பொழுது கலைத் தாகத்தில் நடிக்க வந்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.