AD

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் ‘Mr லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமான SK14 திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை சிவகார்த்திகேயன் சமீபத்தில் தொடங்கினார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "ரகுல் ப்ரீத் சிங்" நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  SK15 என்றழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யானி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல்யாணி அறிமுகமாகிறார். இது தொடர்பான அறிவிப்பை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.