AD

காதலர் தினத்தை காஜல் யாருடன் கொண்டாடியுள்ளார் தெரியுமா?



நடிகர்கள் அனைவரும் அவர்களது ரசிகர்களுக்கு முக்கியதுவம் தருவார்கள் என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயம். ஆனால் நடிகைகள் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் தருவார்களா என்று கேட்டால், வெறும் சொற்களால் என்று சொல்பவர்கள் தான் அதிகம். ஆனால் நடிகை காஜல் அகர்வால் அவரது ரசிகர்களுக்கு இவ்வளது முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது அவரது இன்ஸ்டா பக்கத்தை பார்த்தபோது தான் தெரிந்தது.

ஆம், காஜல் அகர்வால் மிகவும் பிஸியாக படப்பிடிப்பில் இருந்துவிட்டு கேரவனிற்கு ரெஸ்ட் எடுக்க வந்துள்ளார். அப்போது அவரை பார்க்க சில ரசிகைகள் கேரவேனிற்குள் சென்றுள்ளார்கள்.

அவர்களை சந்தித்த காஜல், அந்த ரசிகைகளின் விருப்பத்திற்காக அவர்கள் கொடுத்த சாக்லேட்டை பிரித்து சாப்பிட்டுவிட்டு அவர்களிடம் கொடுக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். மிகவும் பிஸியாக இருக்கும் அவர் ரசிகர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சர்யமாக தான் இருக்கிறது. மேலும் அந்த வீடியோவை பகிர்ந்ததோடு இல்லாமல் காதலர்கள் கொண்டாடும் சாக்லேட் டேக்கான வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.