AD

இந்தியன் 2-வில் காஜலிற்கு வித்யாசமான தோற்றமாம்!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் கமல் ஹாசன். இவர் நடிக்க வந்த காலத்திலிருந்தே பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்தவர். இவருக்கு தற்போது பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு அரசியல்வாதியாக மாறிய கமல் ஹாசன் நல்ல தொண்டர்களை தேடி வருகிறார். மேலும் குடும்ப ரசிகர்களை பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிடித்துவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

கமல் ஹாசன் என்ன தான் அரசியலில் பிஸியாக செயல்பட்டு வந்தாலும், தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். இந்தியன் 2 படத்தை பொறுத்தவரை, லைக்கா தயாரிப்பில், சங்கர் இயக்க, அனிருத் இசையில், ரவி வர்மா ஒளிப்பதிவுல், பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியில், கமல் கதாநாயகனாக நடிக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் கமல் ஹாசனின் லுக் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்பது முன்பே வெளியாகிவிட்டது. ஆனால் தற்போது காஜல் அகர்வாலிற்கு மேக் அப் டெஸ்ட் நடந்துள்ளதாம். காஜலிற்கும் வித்யாசமாக தோற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காஜலின் தோற்றத்தை ரகசியமாக வைக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் சரியான அப்டேட் கிடைத்தால் தான் உண்மை தெரியவரும்.