AD

90 ml ட்ரைலர் விவாகரத்திற்கு ஓவியாவின் பதில் இதுவா ?


பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நடிகை தான் ஓவியா. இந்த நிகழ்ச்சி மூலம் தான் நடிகை ஓவியாவுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா பாதியில் வெளியாகியிருந்தாலும், இவரது நல்ல குணத்தினால் இவருக்கு பெரும் மக்களின் வரவேற்பு கிடைத்தது.

மேலும் பல படவாய்ப்புகளும் தேடி வந்தது. இந்த நிலையில் ஓவியாவின் 90 ml திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. ட்ரைலர் முழுக்க கொச்சை வார்த்தைகளும் இரு அர்த்தம் உடைய பேச்சுகளுமாக இருந்தது. இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. ஓவியாவை பலரும் திட்ட தொடங்கிவிட்டார்கள்.

இவ்வளவு ஆதரவு கிடைத்தும் என் இப்படி ஒரு படத்தில் நடித்தீர்கள் என்றும் பலர் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஓவியா ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், படம் வெளியாவதற்கு முன் தவறாக பேசவேண்டாம் படம் வெளியீட்டிற்கு பிறகு பார்த்துவிட்டு பேசுங்கள் என்று கூறியுள்ளார். படத்தை பார்த்தால் தான் முழுமையாக பேசமுடியும்.