AD

ரெட்டி டைரி-நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாழ்கை வரலாறு!


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சில மாதங்களுக்கு முன் அதிர வைத்த நடிகை தான் ஸ்ரீ ரெட்டி. இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்களும் இவரை தவறான முறையில் பயன்படுத்தியுளார்கள். இவரும் வாய்ப்பிற்காக அவர்களுக்கு அடிபணிந்து போயுள்ளார். டோலிவுட்டில் இவர் கூறும் குற்றச்சாட்டுகளை யாரும் கண்டுகொள்ளாததால், தமிழ் சினிமா பக்கம் வந்த ஸ்ரீரெட்டி பல முக்கிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் என அவர்கள் மீது பாலியல் குற்றம் சாட்டினார்.

இது பெரிய சர்ச்சையையும் கிளப்பியது. இயக்குனர் எ. ஆர். முருகதாஸ், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், நடிகர் ஆதி, நடிகர் ஸ்ரீகாந்த் என சிலரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டார். இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்றும் அவர்களின் பெயரையும் வெளியிடவுளேன் என்றும் கூறி மற்ற நடிகர்களையும் பீதியில் ஆழ்த்தினார். இந்த நிலையில் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.


தமிழில் இவரது வாழ்க்கையை படமாக எடுக்க போகிறார்களாம். இவர் வாழ்க்கையில் அனுபவித்த விஷயங்கள் குறித்தும் இந்த திரைப்படம் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த படம் மூலம் ஸ்ரீ ரெட்டியை தவறாக பயன்படுத்திய சில பிரபலங்களின் பெயர்களையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த படத்தை, ரெட்டி டைரி என்ற பெயரில் தான் எடுக்க போகிறார்களாம். இதில் ஸ்ரீ ரெட்டியே கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.

Doctor Alaudin படத்தை இயக்க, சித்திரை செல்வன் மற்றும் ரவிதேவன் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இந்த படத்தை தயாரிக்க போகிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு அளப்பி மற்றும் கோவாவில் நடந்து வருகிறதாம். படத்தின் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டம் போட்டுள்ளார்களாம். சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையை நீக்க தான் இந்த படம் என்று கூறப்படுகிறது.