AD

'தளபதி 63' இல் விஜயுடன் இணைந்துள்ள சூப்பர் சிங்கர் பிரபலம்


தற்போது தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்திலும் ஒரு சூப்பர் சிங்கர் பிரபலம் இணைந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சினிமாவிலும் பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் சூப்பர்சிங்கர் சாம்பியன் பட்டம் வென்ற செந்தில், சினிமாவில் நடித்தும் பாடியும் வருகிறார்

அந்த வகையில், கப்பீஸ் பூவையர் ஜூனியர் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கானா மற்றும் கிராமத்து பாடல்களை பாடி பலருடைய பாராட்டுக்களை பெற்ற கப்பீஸ் பூவையர், 'தளபதி 63' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்
ஒரு பாடலை பாடுவதோடு, ஒரு சிறிய கேரக்டரிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் 'தளபதி 63' படத்தில் விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.