AD

ஆர்.கே.பாலாஜி படத்துக்கு அ.தி.மு.க வினர் எதிர்ப்பு!!!

நடிகை பிரியா ஆனந்த் நடிகர் ஆர்.கே.பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்.கே.ஜி. இப்படம் அரசியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.
படபிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன் பிறகு தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.கே.பாலாஜி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் உள்ள படம் எம்.ஜி .ஆர், ஜெயலலிதாவை நினைவு படுத்துவது போல் அமைந்து உள்ளதால் அ.தி.மு.க  வினர் இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.