AD

நடிகை இலியானாவின் ஆசை நிறைவேறுமா?


நடிகை  இலியானா திடீரென்று இந்தியில் நடிக்கச் சென்றார். பாலி வுட்டில் நுழைந்த வேகத்தில் வெற்றி படமும் அமைந்தது. ஆனால் அங்குள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் திணறினார். வெற்றி படம் தந்தபோதும் பட வாய்ப்புகள் குவியவில்லை.

வந்த வாய்ப்புகளை ஏற்று நடித்தவருக்கு கைவசம் இருந்த படங்களை முடித்துக்கொடுத்த பின் புதிய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களில் கவனத்தை திருப்ப முடிவு செய்தார். அதற்காக தெரிந்த நண்பர்களை தூதுவிட்டு வாய்ப்பு தேடியதுடன் தனது அரை நிர்வாண கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
சில மாதங்கள் வாய்ப்புக்காக காத்திருந்துவிட்டு அது கைகூடாததால் மும்பை புறப்பட்டு சென்றார். தற்போது கைவசம் படம் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் இணைய தள பக்கத்தில் மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்புக்கு வலை வீசிக்கொண்டிருக்கிறார். இவருக்கு இந்த புகை படங்கள் கை கொடுக்குமா?  பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்!