AD

உலக நாயகனின் மகனாக நடிக்கும் நடிகர்!!

 நடிகர் கமல் நடிக்கும் மிக பிரமாண்டமன படம்தான் இந்தியன் 2, இந்த படத்தை ஷங்கர் இயக்கிவருகிறார் என்பது முதலே தெரிந்த விஷயம். தற்போது இந்த படத்தில் நடிகர் சித்தார் நடிக்கிறார், அதுவும்  கமலின் மகனாக என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார், மற்றும் நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் படக்குழுவில் இணைந்திருக்கிறார்கள். இதில் வில்லனாக அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை  லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய காட்சிகளுக்காக படக்குழு தைவான் செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.