AD

நடிகர் அஜித் - நடிகை வித்தியா பாலனுடன் இணையும் ரங்கராஜ் பாண்டே!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம்தான் விஸ்வசம். இந்த படத்ததில் தல சென்ட்டிமென்ட் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருந்தார். அதன் பிறகு  அஜித் நடிக்கும் படம்தான் தல59. மறைந்த முன்னால் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை எச்.வினோத் இயக்குறார், இந்த நிலையில், தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றி போனி கபூர் கூறும்போது வித்யாபாலானை  தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது!!