AD

சிம்பு வெளியிட்ட வீடியோவும் - சர்ச்சையான பேச்சுகளும்!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம்  "வந்தா ராஜாவாகதான் வருவேன்"  இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு  கட்அவுட்டுக்கு வையுங்கள்,  பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில்,  இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதன் விரிவாக்கத்தை தற்போது பார்க்கலாம்.

சிம்பு தனது ரசிகர்களிடம் ’இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இது சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் ‘சிம்புவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? விளம்பரத்துக்காகத்தான் இதை அவர் செய்கிறார் எனவும் விமர்சித்தார்கள். இதனால் கோபமான சிம்பு ‘என் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்’ என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். இது பயங்கர சர்ச்சையானது.  இதுபற்றி பால் முகவர் சங்கத்தினரே  கமி‌ஷனரிடம் புகார் கொடுக்கும் வரை சென்றது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் ரசிகர் பேனர் வைக்கும் தகராறில் கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் படம் சமூகவலை தலங்களில்  வைரல் ஆனது. அந்த ரசிகரின் வீட்டுக்கு இன்று வந்த சிம்பு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு உடைகள் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இப்போதும் சொல்கிறேன்,  அண்டா நிறைய பால் ஊற்றுங்கள்,  வாய் இல்லாத கட் அவுட்டுக்கு ஊற்றுவதற்கு பதிலாக படம் பார்க்க வரும் வாய் உள்ள மனிதர்களுக்கு ஊற்றிக் கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றை மதிப்பவன் நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை’  என்று கவலையாக கூறினார். எது எப்படியோ சிம்பு பேசினாலே சமூகவலை தலங்களில்  சர்ச்சை ஆகிவிடுக்கின்றதா? இல்லை  சர்ச்சையாக்கை படுகின்றதா? என்று தெரியவில்லை.