AD

சங்கரின் புதிய படத்தில் விக்ரம் விஜயின் வாரிசுகள்!!



டைரக்டர் சங்கர் தற்போது இந்தியன் 2 என்ற படத்தை கமலை வைத்து எடுத்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு இவர் இயக்கவிருக்கும் காதல் படத்தில் விஜய் மற்றும் விக்ரமின் மகன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த  படத்தில் இளமைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்க முடிவு செய்து இருக்கிறார் என்கிறார்கள்.

ஷங்கர் கடைசியாக இளைஞர்களை கவரும் வகையில் பாய்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதுபோன்ற ஒரு கதையை தான் இயக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் இருவரையும் நடிக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.