AD

காஜல் அகர்வாலை மறுபடியும் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!!

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார். பாரீஸ் பாரீஸ் என்ற பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் காஜலுக்கு சக தோழி பாலியல் தொல்லை தரும் ஆபாச காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த கண்ட  ரசிகர்கள்  அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதற்கிடையில் தெலுங்கில் சீதா என்ற படத்தில் நடித்து வருகிறார் காஜல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளி யிடப்பட்டது. அதைக்கண்டதும் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்தனர். பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்த ஆபாச காட்சியில் கொடுத்த அதே எக்ஸ்பிரஷனை இந்த பர்ஸ்ட் லுக் புகைப்படத்திலும் காஜல் தந்திருப்பதே அதிர்ச்சிக்கு காரணம்.  இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பதற்கு காஜலை அவரது ரசிகர்கள் நெட்டில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.