AD

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை!!

நடிகர்கள் ரஜினி, பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்சயகுமார் ஆகியோர் அரசியல் களத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாஜகவில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.  இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் சினிமா நட்சத்திரங்கள் பலர் களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர்.

நடிகை இஷா கோபிகர் பாஜகவில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ  செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் விஜய் நடித்த 'நெஞ்சினிலே', விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா', அகத்தியன் இயக்கத்தில்  பிரசாந்த் உடன்  'காதல் கவிதை போன்ற தமிழ்ப்படங்களிலும் பல தெலுங்கு, இந்தி படங்களிலும்   நடித்தவர்  தான்  நடிகை இஷா கோபிகர்.

இவர்  நேற்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.