AD

அரசியலுக்கு வரும் நடிகை ராதிகா சரத்குமார்!!

 கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த தொகுதியில் திமுகவின் பெண் பிரபலம் ஒருவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
நடிகர் சரத்குமார் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி அருகில் உள்ள திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் ராதிகா பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்  திரைப்படத்தில் மட்டுமின்றி சீரியலிலும் பிரபலமாக இருப்பதால் பெண்கள் ஓட்டு அவருக்கு அதிகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.