AD

மீண்டும் இணையும் தனுஷ் - ஜிவி பிரகாஷ்!!

 ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கிய 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு முன்னரே இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் இசை ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில்   இந்த படத்தின் டிரைலரை  பதிவு செய்து புரமோஷன் செய்துயுள்ளார்.  இந்த தகவலை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தில் மஹிமா நம்பியார், காளிவெங்கட்,  ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இந்த படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.