AD

இந்திக்கு போகும் செல்வராகவனின் சூப்பர் ஹிட் திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் வேளையில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படம் ஏற்கனவே  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்திருந்தார்கள். நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் முன்னால் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் 15 வருடங்கள் கழித்து தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'மலால்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த படத்தின் நாயகன், நாயகி கேரக்டர்களில் மீஜான் ஜாஃப்ரே மற்றும் ஷர்மின் ஷேகல் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.  இந்த படத்தை பிரபல மராத்தி இயக்குனர் மங்கேஷ் ஹடவாலா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.