AD

தளபதி 63 படத்தின் விஜயின் தைரியம்!!

இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம்தான் "தளபதி 63", இந்த படத்தின் சண்டை காட்சி விறுவிறுவிப்பாக நடந்து வருகிறது.  இந்த படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் காட்சியாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் சில சண்டை  காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து டூப் இன்றி நடித்து வருகிறார். இதில் 100  ஸ்டண்ட் கலைஞர்கள் இந்த சண்டைக்காட்சியில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா சம்மந்த பட்ட காட்சி மிக விரைவில் படமாக்க படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
விஜயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளரர் நயன்தாரா, மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் கதிர் நடிக்கிறார், இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில்  விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்க்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.  இந்த படம் இவ்வருட தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.