AD

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ராஷிகண்ணா!!!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு பல வெற்றிப்படங்களில்  நடித்தவர் என்பது குறிப்பித்தக்கது.  அதே போல் இந்த வருடம்மும் இவர் பல படங்களில் நடித்தி வருகிறார்.  அவர் நடித்து வரும் 'மாமனிதன், ''சூப்பர் டீலக்ஸ்', 'சிந்துபாத்', 'சயிர நரசிம்மரெட்டி', போன்ற படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் 'ஸ்கெட்ச்' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில்  நிவேதா பேத்ராஜ் மற்றும் ராஷிகண்ணா ஆகிய  இருவரும் நாயகிகளாக நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் ராஷிகண்ணா நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த தகவலை ராஷிகண்ணா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.