AD

சிவகார்த்திகேயன்- நயன்தாரா புதிய படத்தின் தலைப்பு!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம்தான் 'எஸ்கே 13'.  இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  நயன்தாரா ஏற்கனவே  சிவகார்த்திகேயுடன் வேலைக்காரன் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை ராஜேஷ் எம் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'மிஸ்டர் லோக்கல்' என்ற தர லோக்கல் டைட்டில் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தரா இவர்களுடன் நடிகை ராதிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.