AD

நடிகை வரலட்சுமியின் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு!!

நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்து இருந்தார்.  அவர் நடிப்பில் வெளியான 'Mr.சந்திரமெளலி, சண்டக்கோழி 2, 'சர்கார்', 'மாரி 2' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.  இந்த படங்களில் வரலட்சுமி வித்தியாசமான வேடங்கள் ஏற்று மிக சிறப்பாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றான 'நீயா 2' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று  வெளியாகவுள்ளதாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்

நடிகை வரலட்சுமியுடன் நடிகர் ஜெய், ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். ஷபீர் இசையில், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படம் வரும்  விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.