AD

பேட்ட - விஸ்வாசம் படங்களுக்கிடையிலும் சர்காரின் சாதனை!!

கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படங்கள் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் பிரான்ஸ் நாட்டில் வசூலை குவித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'சர்கார்' படம் மீண்டும் திரையிடப்பட்டு,  திரையரங்கு நிரம்பும் அளவுக்கு ரசிகர்கள் குவிந்ததாக பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்வி, வசூல் குறித்து தகவல்களை வெளியிடும் "EOY ENTERTAINMENT" நிறுவனம் தனது சமூக வலைத்தல பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை பொருத்தவரையில் தமிழ்ப்படங்களில் விஜய் படங்களுக்கு மட்டுமே அதிக பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், தெறி படத்திற்கு 24,827 பார்வையாளர்களும், மெர்சல் படத்திற்கு 32,471 பார்வையாளர்களும், சர்கார் படத்திற்கு  25,378 பார்வையாளர்களும் வந்திருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.