AD

தனுஷை வைத்து இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய படம் பேட்ட, இப்படம் 3 வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தின் வசூல் மழையால் அனைத்து விநியோகிஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தனுஷ் தனது டுவிட்டரில் பக்கத்தில் ஏற்கனவே தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்து உள்ளார்.  அது 'பேட்ட' படத்தால்தான்  தனுஷின் படம் தள்ளிப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ 'பேட்ட' படம் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு திருப்பு முனையாகத்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.