தனுஷ் உடன் ஜோடி சேரும் மஞ்சு வாரியர்!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த மாரி 2 படம் தற்பொழுது வெற்றி படமாக அமைந்துள்ளது, இந்த படத்தின் வரும் ரௌடி பேபி பாடல் மிகவும பிரபலம்.
தற்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி அசுரன் படம் தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார். வட சென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்குகிறார். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், தனுஷ் கையில் ஈட்டியோடு இருப்பது மாதிரியும் , மஞ்சு வாரியர் வயதான தோற்றத்தில் இருப்பது மாதிரியும் போஸ்டரில் உள்ளது.
இந்த போஸ்டரை பார்க்கும் போது, படத்தில் பிளாஷ்பேக் சீன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியே படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment