AD

ஆரவ்வுடன் உள்ள காதலை உறுதி படுத்திய ஓவியா!!!

 நடிகை ஓவியா தற்பொழுது காஞ்சனா 3, களவாணி 2, 90 எம் எல் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்பொது அவர் ஆரவ்வுடனான காதல், பிக்பாஸ் அனுபவம், கமிட் ஆகியுள்ள படங்கள் என பல விஷயங்களை  பகிர்ந்து கொள்கிறார்.

இவர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.இவர் இதற்கு முன் பல படங்களில் நடித்து இருத்தாலும் பிக் பாஸ் 1  நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்.
இதில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்,  தமிழகத்தில் மட்டும்  ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் குரூப்கள், ஃபேன் பேஜ்கள் உருவாகின.

இவர் தான் லாரன்சுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. நகைச்சுவை செய்வது எளிதான காரியமல்ல என இப்படத்தில் நடித்து நான் தெரிந்துகொண்டேன். களவாணி 2 படம் எனக்கு 9 வருடங்களுக்கு முன்னர் நான் நடித்த களவாணி முதல் பாகத்தை நினைவுபடுத்தியது. 90 எம்எல் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். என்னுடன் சேர்ந்து இதில் 5 பெண்கள் நடிக்கின்றனர். அனைவரும் புதுமுகங்கள். 
அதில் ஒரு பெண் தான் நினைத்த மாதிரி வாழ்கிறாள் என்பது பற்றிய கதை.

அதன் பிறகு இவர் ஆரவ்வுடன் நட்பு மட்டும்  என  கூற முடியாது. விரைவில் நல்ல விஷயத்தை அறிவிப்போம் என்றார்.