AD

நமீதா படத்துக்கு வந்த சிக்கல்!!!

திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் அகம்பாவம், இந்த படத்தை  ஸ்ரீ வாராகி அம்மன்  பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள்.

கதை, திரைக்கதை வசனம் ஏழுதி தயாரித்தும் வருகிறார் வாராகி.  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இப்படத்தை ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார், இவர் ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிட தக்கது.

தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்த அவரை," வாழ்வில் மாற்றம்" ஏற்படுத்த  இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன்.

குடிக்காமல் படப்பிடிப்பை முடித்து தரும்படி கேட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் ஒப்பந்தத்தை மீறி தினமும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால், இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டேன். நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார். இதற்கு முன் தயாரிப்பாளர் வாராகி சிவா மனசில புஷ்பா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.