AD

சென்னை மாப்பிளையை கரம் பிடிக்கும் மலையாள நடிகை!!!

நடிகை திவ்யாஉன்னியின் சகோதரியும் மலையாள நடிகையுமான வித்யா உன்னிக்கு கடந்த ஞாயிறு அன்று கேரளாவில் உள்ள கொச்சியில் திருமணம் நடைபெற்றது.   திவ்யாஉன்னி தமிழில் 'பாளையத்து அம்மன்', 'வேதம்', 'ஆண்டான் அடிமை' "கண்ணன் வருவான்" உள்பட பல திரைப்படங்களில்  நடித்திருந்தார்.

வித்யா உன்னிக்கும் சென்னையை வசிக்கும்  சஞ்சய் வெங்கடேஸ்வரன் என்பவருக்கும் கொச்சியில் நடைபெற்றது.  இந்த திருமணத்தில் திவ்யா உன்னி தனது கணவருடன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

நடிகை வித்யா உன்னி மலையாளத்தில் "டாக்டர் லவ்' , " 3ஜி தேர்டு ஜெனரேஷன்" ஆகிய இரண்டு  படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.