AD

நடிகை தபு எடுத்துள்ள புதிய முடிவு!!

நடிகை  தபு சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்திருப்பவர். நடிகை  தபு தமிழ் படம் மட்டும் இல்லாது இந்தி, மலையாளம் மற்றும்  தெலுங்கு படங்களிலும் நடித்திருகிறார். 47 வயதாகும் தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வயதானாலும் இளமையை கட்டுக்குலையாமல் பராமரித்து வருவதையடுத்து இணைய தள இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இளமை ததும்பும் படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகைகள் சிலர் அனுபவத்தின் அடிப்படையில் டைரக்டர்களாகி உள்ளனர். அதுபோல் டைரக்டர் ஆகும் ஆசை இருக்கிறதா என்று கேட்டபோது பதில் அளித்தார். இதுகுறித்து தபு கூறியதாவது,  சினிமாவில் நடிப்பதால் மட்டுமே டைரக்டர் ஆகிவிட முடியும் என்று நான் எண்ணவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு முழுபடத்தை இயக்குவது, தயாரிப்பது என்பது என்னால் முடியாத காரியம். வேண்டுமானால் பின்னாளில் குறும்படம் இயக்கலாம். எனது ஆர்வம் என்னவென்றால் கதை எழுது பவருக்கு துணையாக இருந்து உதவவேண்டும் என்பதுதான்.