AD

உலகளவில் சாதித்த சூப்பர்ஸ்டாரின் பேட்ட படம்!

தமிழ் சினிமாவின் இந்த ஆண்டை யாராலும் மறக்க முடியாது காரணம் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் வெளியீடு தான். தல அஜித் மற்றும் தலைவர் ரஜினிகாந்த்தின் படங்கள் முதல் முறையாக மோதியது. இந்த இரு படங்களை பொறுத்தவரை விஸ்வாசம் தமிழகத்தில் பேட்டயை வென்றாலும் வெளிநாடுகளில் விஸ்வாசத்தை வென்றது பேட்ட.

ஆம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம் அதனால் தான் பேட்ட உலகளவில் $2.15 மில்லியன் வசூலித்துள்ளது. எந்திரன், கபாலி, 2.0 என இந்த மூன்று ரஜினிகாந்த் படங்களுமே உலகளவில் $2.15 மில்லியன் வசூலித்த படங்கள் தான். தற்போது இந்த வரிசையில் பேட்ட படமும் சேர்ந்துள்ளது. இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.