AD

நடிகர் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின்,  நடிகை தமன்னா, மற்றும் வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்தான்  'கண்ணே கலைமானே'.  இந்த  திரைப்படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில்  அறிவித்துள்ளார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கவுள்ளன.

இந்த படம்  காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.