AD

நடிகர் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன்!!

நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்தான்  'தல 59' இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது நடிகை வித்யா பாலன். இந்த நிலையில் இந்த படம் 'பிங்க்' ரீமேக் படமாக இருந்தாலும், 'பிங்க்' படத்தில் இல்லாத தமிழ் பதிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு கேரக்டரில் நடிக்க வித்யாபாலான் ஒப்பந்தமாகியுள்ளார். அஜித்தின் மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் இந்த படத்திற்காக ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
மேலும் இவருடைய கேரக்டர் அஜித்தை ஊக்கப்படுத்தும் முக்கியமான கேரக்டர் என்றும் அஜித்-வித்யாபாலன் ஆகிய இருவருக்கும் ஒரு பாடலும் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்  இசையமைப்பாளர் யுவன்ஷங்கர். இந்த படம் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.