AD

நடிகர் ஆர்யா- சாயிஷா திருமண தேதி அறிவிப்பு!!

நடிகர்களான விஷால், ஆர்யா திருமணங்கள் விரைவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விஷாலின் திருமணம் குறித்தும் அவரது எதிர்கால மனைவி குறித்தும் ஏற்கனவே  செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆர்யாவின் திருமணம் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது. ஆர்யாவுக்கும் அவர் நடித்த 'கஜினிகாந்த்' படத்தின் நாயகியான சாயிஷாவுக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளது.  ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் கலந்து பேசிவிட்டதாகவும் வரும் மார்ச் 9,10 ஆகிய தேதிகளில் ஆர்யா-சாயிஷா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.