AD

ஒய் திஸ் கொலவெறி சாதனையை முறியடித்த பிரபல இளம் நடிகை! ரசிகர்கள் ஷாக்


ஒய் திஸ் கொலவெறி பாடல் அத்தனை பேரின் மனங்களையும் கொள்ளை கொண்ட ஒன்று. தனுஷ் நடிப்பில் வந்த இப்படத்தில் அவரே பாடலையும் எழுதிபாடியிருந்தார்.

வந்த 28 நாட்களிலேயே 20 மில்லியன் பார்வைகளை பெற்று Youtube ல் மிக முக்கிய சாதனை படைத்தது. அனிருத் இசையமைத்த இந்த பாடல் தற்போது 17 கோடியே 37 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

இந்நிலையில் சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான ஃபிடா படத்தின் வச்சிண்டே பாடல் 17 கோடியே 39 லட்சம் பார்வைகளை கடந்துவிட்டது.

ஏழு வருடங்களுக்கு முன் வந்த தனுஷின் கொலவெறி பாடல் சாதனை கடந்த 2017 ல் வந்த ஃபிடா வச்சிண்டே பாடலால் சாய்பல்லவி முறியடித்துள்ளார்.