AD

மம்முட்டியுடன் இணையும் ஜெய் - சன்னி லியோன்!!


நடிகர் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா படத்தின் மூலம் நடிகர் ஜெய் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தை விஷாக் இயக்கின்றார். ஜருகண்டி படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எல்.சுரேஷ் இயக்கும் நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக அவர் நடித்துள்ள மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆக்‌‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார்.  இதில் மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுகிறார்.

2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.