AD

தென்னிந்திய அளவில் முதல் இடம் பிடித்த பாடல்!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மாரி 2.  இதில் இவருக்கு ஜோடியாக  சாய் பல்லவி நடித்திருந்தார்.  இந்த படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் அல்லாது, யுடியூபில் வெளிவந்த நாளில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. அதுவும் யுடியூபில் 12.5 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது. அதாவது 12 கோடியே 68 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள்.

அந்த அளவிற்கு இந்த பாடல் பல்வேறு மொழி தெரியாத ரசிகர்களையும் கவர்ந்து உள்ளது . இன்னும் சிலநாட்களில் 15 கோடியை எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பாடலுக்கு நடனப்புயல் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்திய அளவில் மிக குறுகிய நாட்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்ற இரண்டாவது பாடல், தென்னிந்திய அளவில் குறுகிய நாட்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்ற முதலாவது பாடல்,
தென்னிந்திய அளவில் 10 கோடி பார்வையாளர்களை 4 வது பாடல், தமிழ் சினிமாவில் 10 கோடி பார்வையாளர்களையும், 10 லட்ச லைக்குகளையும் கடந்த முதல் தமிழ் பாடல் ஆகிய சாதனைகளை இந்த ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது.