AD

நீயா 2 - தில்லுக்கு துட்டு 2 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நீயா 2 படத்தின் டிரைலர் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'நீயா 2' படத்தை எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். ஷபீர் இசையில், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
அதே போல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி  நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள "தில்லுக்கு துட்டு 2" என்ற படம் வெளிவருகிறது. இந்த  காமெடி கலந்த திரில்லர் படத்தை  இயக்கியவர் ராம்பாலா, இதில் சந்தானுத்துடன் இணைந்து சிறுத்தை சிவாவும் நடித்துள்ளார்.