சிம்புவுடன் இணையும் அனுஷ்கா
2010இல் சிம்பு - திரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் செய்தார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி விட்டேன். சிம்புவின் கால்சீட்டிற்காக காத்திருக்கிறேன் என்றார்.
அதேபோல், இந்த படத்தில் நாயகியாக அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதைவைத்து பார்க்கையில் விண்ணைத்தாண்டி வருவாயா-2வில் திரிஷாவிற்கு பதில் அனுஷ்கா நடிக்கலாம் என தெரிகிறது.
Post a Comment