AD

பிக்பாஸ் சீசன் 4 இல் டிஆர்பி-காக வரப்போகும் பிரபலங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகழில் ரசிகர்கள் அடுத்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் பற்றிதான். 3 சீசன்களை கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிற நிலையில் அடுத்த ஜூன் மாதம் ஆரம்பம் ஆகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கு தற்போது விஜய் டிவி ஆட்களை தேர்ந்தெடுத்து வருகிறது. 

எப்போதுமே டிஆர்பி எதிர்கொள்வதில் விஜய் டிவி அடித்துக்கொள்ள ஆளில்லாத வகையில் கடந்த சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகியோர்களின் பிரச்சனையை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தது.  அதே போல் இந்த வாட்டியும் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய புருஷனை இன்னொருவர் வைத்திருக்கிறார் என ஊரே காரித்துப்பும் அளவுக்கு நடந்து கொண்டவர்கள் தான் ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வர் ஜோடியை தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர உள்ளனர்.

மேலும் பெரிய சம்பளம் என்பதால் அவர்களது சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான அறிகுறிகள் தெரிய வாய்ப்பு இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.