AD

அதுல்யாவின் மிகச்சிறந்த தோழி அஞ்சலி

நாடோடிகள் 2 திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதுல்யா தொடர்ந்து நடிகை அஞ்சலிதான் தனது சிறந்த தோழி என  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 நாடோடிகள்-2 படத்தில் நடிக்கும் போது அஞ்சலி எனக்கு சீனியர். ஒரு நடிகைக்கு உடற்பயிற்சி,  உணவுக் கட்டுப்பாடு கட்டாயம் தேவை என்பது போன்ற விஷயங்கள் கூட தெரியாமல் இருந்த எனக்கு,  அந்த படத்தில் ஒரு நல்ல தோழியாக கிடைத்த அவர் எனக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தார்.

 இப்போது சென்னை வந்தால் அவரும் ஹைதராபாத் போனால் நானும் வீடு வரை போய்விட்டு வரும் அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆகிட்டோம். இந்த நட்பு வட்டத்துக்குள் இப்போது இந்துஜாவும் இணைஞ்சுட்டாங்க. இப்போ,  இவர்கள் இல்லாமல் என் குடும்ப நிகழ்ச்சிகள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.