AD

அறிவு இருக்கிறதா என்று வனிதாவை திட்டிய விஜய் சேதுபதி

விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகள் இவர்களின் மகள் தான் வனிதா என்பது யாவரும் அறிந்ததே ஒரு விஷயம். விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான இவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் பிக் பாஸ் சீசன் 3 இன் வில்லியாக அவதாரம் எடுத்தார்.

இந் நிலையில்  இவர் சமீபத்தில் பேட்டியொன்றை அளித்திருந்தார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட போது விஜய்சேதுபதி  பற்றி கேட்ட போது அவர் கூறியது,

வனிதா அவருடனான முதல் சந்திப்பை நினைவு கூறியுள்ளார். அதில், மற்றவர்களைப் போல நானும் இவரது மிகப்பெரிய ரசிகை. தமிழ்சினிமாவில் விஜய்க்கு பின்னர் ஒரு நடிகருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன் என்றால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதிதான். இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பாக நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு விஷயத்தை பேசுவதற்காக அவருடைய நம்பரை பெற்று அவருக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன் அதில் என்னுடைய பெயரை குறிப்பிட்டு என்னை பற்றி ஒரு மிகப்பெரிய கதையை எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன்.

நான் குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடியே எனக்கு அவரிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில், உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா என்று அவ்வளவு உரிமையாக என்னிடம் கூறினார். நான் உடனே ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் போன் செய்து நான் தான் வனிதா விஜயகுமார் என்று சொன்னால் எனக்கு தெரியாதா எதற்காக இவ்வளவு விளக்கத்தை கொடுக்கிறீர்கள்.அந்த அளவிற்கு மிகவும் தன்னடக்கம் ஆன ஒரு மனிதர் என்னுடைய படங்களை எல்லாம் ரசித்து பார்த்துள்ளதாக என்னிடம் கூறினார் அவர் வேண்டுமானால் என்னிடம் சாதாரணமாக பேசிவிட்டு இருக்கலாம் ஆனால் அவர் என்னிடம் அவ்வளவு அழகாக பேசி நான் உங்களுடைய ரசிகன் என்று கூறி இருந்தார்.

அதன் பின்னர் நான் என்னுடைய மகளை அழைத்துக்கொண்டு அவருடைய சூப்பர் டீலக்ஸ் படத்தின் போது அவரை சந்திக்க நேரில் சென்றிருந்தேன். நான் சென்ற போது அவர் பெண் கெட்டப்பில் இருந்தார். அப்போது நான் போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பெண் கெட்டப்பில் இருப்பதை நான் கண்டதும் மிகவும் வெக்கப்பட்டு விட்டார். அவர் என்னுடைய கண்ணை பார்த்து கூட பேசவில்லை அவர் மிகவும் இனிமையான மனிதர் என்று புகழ்ந்துதள்ளியுள்ளார்.