AD

எப்போ அம்மவாக போறீங்க ? என்ற கேள்விக்கு பதில் சொன்ன டிடி

விஜய் தொலைக்காட்சியிலுள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.   ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கிய இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அவர்கள் சமூக  வலைத்தளங்களில்  ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு அழகாக பதில் கூறியுள்ளார். அதில் ரசிகர்கள் 

உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? ரித்திக் ரோஷன் உடன் டேட்டிங் போனது உண்டா?அக்கா நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? நீங்கள் எப்போ அம்மா ஆகப் போகிறீர்கள்?உங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா?? பல கேள்விகளை கேட்டுள்ளார்.

எனக்கு சுத்தமா  புகை பிடிக்க புடிக்காது. நான் எங்க அப்பாவிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். என்னை சுற்றி உள்ளவர்கள் என்ன வேண்டும் ஆனாலும் பண்ணலாம். ஆனால், நான் அந்த மாதிரி விஷயங்கள் செய்வது கிடையாது. என்றும் ரித்திக் ரோஷனுக்கு  என்னுடன் டேட்டிங் ஓகேன்னா எனக்கும் ஓகே. எனக்கு தெரிஞ்சு ஹன்சிகா தான் அவங்களோட நல்ல நட்பில் இருக்கிறார்கள். ஹன்சிகா சிபாரிசு செய்தால் எனக்கு ஓகே. என்று பதிலளித்துள்ளார். 

மேலும் அக்கா நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?  என்ற ரசிகரின் கேள்விக்கு டிடி சிரித்துக் கொண்டே உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி. உங்களுடைய வாழ்க்கையிலும் அன்பு கிடைக்க நான் வாழ்த்துகிறேன். அத்துடன் குழந்தை பெற்றால் தான் அம்மா இல்லை. அன்னை தெரேசா எவ்வளவு பேருக்கு அம்மா. ஆமாம் எனக்கு விவாகரத்து ஆகி விட்டது. விவாகரத்து ஆகி நான்கு வருடங்களாகிறது.என்று பொறுமையாக பதிலளித்துள்ளார். இதன் பின்னர் ரசிகர்கள் மேலும் தொடர்ந்து கேள்வியெழுப்பிய வண்ணமேயுள்ளளர்.