AD

பிக் பாஸ் போட்டியாளர்கள் என்றால் கெமிஸ்ட்ரி வேற மாதிரிதான் இருக்கும் - வனிதா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தகுக்கூ கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததில் முதல் இடத்தை வனிதாவும் இரண்டாவது இடத்தை உமா ரியாசும் பிடித்து இருந்தார்கள்.

சமீபத்தில்  வனிதா பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது குவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டதுக்கு பதிலளித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அங்கே வந்த ஆட்கள் வேறு அங்கே நடந்த விஷயங்கள் வேறு. அந்த நிகழ்ச்சியையும் குக்கூ வைத்து கோமாளி நிகழ்ச்சியையும் நாம் ஒப்பிட முடியாது.

 ஒருவேளை அதே நிகழ்ச்சியில் வந்த கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் போன்றவர்களை வைத்து நீங்கள் குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி இருந்தால். அதனுடைய கெமிஸ்ட்ரி வேற மாதிரிதான் இருந்திருக்கும். கோமாளி நிகழ்ச்சியில் யாரும் பொய் சொல்ல வேண்டும் என்றோ நடிக்க வேண்டும் என்றோ,சீன் போட வேண்டும் என்றோ அவசியம் இங்கே நாம் சமையலில் மட்டும் தான் கவனம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார் . இது  கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் ரசிகர்களிடத்து பெரிதும் வைரலாகியுள்ளது.