AD

ட்ரெடிஷனல் லுக்கில் பிகில் நடிகை

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்றது.இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.

இந்நிலையில்  சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இந்திரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலிருந்து பல்வேறு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த நிலையில் தற்போது ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்ஸ் குவிந்து வருகிறது.