AD

ஆளவந்தான் படத்தில் கமலுடன் நடித்த சிவா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களிலொருவர் மிர்ச்சி சிவா.  இவர் 12B என்னும் படத்தின் மூலம்  சினிமா உலகிற்கு அறிமுகமான பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற நிலையில்  இவர் 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த  ஆளவந்தான்  நடிக்கின்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கமலஹாசனின்  வித்தியாசமான கதாபாத்திரத்தில் உருவாகிய இத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த  இந்த படத்தில் ஒரு சிறு காட்சியில் மட்டும் சிவா நடித்திருந்தார். அந்த புகைப்படமே சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள்  மிர்ச்சி சிவாவா இது? ஆளவந்தான் படத்தில் நடித்துள்ளாரா  என்று வியப்புடன் கூறி வருகின்றனர்.