AD

நயன்தாரா விக்னேஸ் காதலில் பிளவு குழப்பத்தில் ரசிகர்கள்

இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் நயன்தாரா, அவரது காதலர் விக்னேஷை பிரிந்துவிட்டார் என்று பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததையடுத்து நயன்தாரா விக்னேஷ் உடன் எடுத்த புகைப்படமொன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை சேர்ந்து கொண்டாடிய இந்த ஜோடி, புது வருடம் பின்பு விருது விழா என தனியாகவே வந்திருந்த நிலையில் எங்கு சென்றாலும் விக்னேஷ் உடன் செல்லும் நயன்தாரா தனியாக வந்திருந்ததால் இருவருக்குள்ளும் பிரச்சினை என்றும் காதலில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்ற தகவல் தீயாய் பரவியது.

இதற்கு நேற்றைய தினத்தில் குறித்த தகவல் பொய் என்று இருவரும் கூறியதாக தகவல் வெளியானது. 
தற்போது நயன்தாரா உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் மிஸ் விக்கி என்ற வாசகம் எழுதியிருப்பதை தனது முகத்தினை மறைத்துக்கொண்டு வைத்திருக்கும் புகைப்படத்தினையும், விருது விழாவில் கட்டியிருந்த பட்டுப்புடவையில் விக்னேஷ் உடன் சேர்ந்த எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.