AD

சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல் : நிவேதா

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். அதை தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகின்ற நிலையில்  தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருக்கிறார்.

இவர் தற்போது  தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடியுள்ளார் . அப்போது ரசிகர் ஒருவர் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த இவர் "சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல்" என கூறியுள்ளார்.