ஜானு பாத்திரத்திற்காக எனக்கு கிடைத்த அன்பு அதிகம் : த்ரிஷா உருக்கம்
பிரபல நடிகை த்ரிஷா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து இந்த வருடத்துடன் 17 வருடங்களாகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி இரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த திரைப்படமான “96” திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து அவர் குறிப்பிடுகையில்,
ஜானு பாத்திரத்திற்காக எனக்கு கிடைத்த அன்பு அதிகமானது. அது எதிர்பாராதது. ஆனால் இந்தப் பாத்திரம் நல்ல வரவேற்பை பெறும் என்பது எனக்குத் தெரியாது.ராமையும், ஜானுவையும் ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்பது எனக்கு தெரியாது.
ஒரு எளிமையான மஞ்சள் குர்தா இந்த அளவுக்கு வைரலாகப் போகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஜெஸ்சிக்கு பின் இந்த ஜானுதான் அதிகம் பேசப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


Post a Comment